அதிமுக-வை மீட்க யார் முன் வந்தாலும் ஆதரவு உண்டு – பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அதிமுக-வை மீட்க யார் வந்தாலும் தன் ஆதரவு உண்டு என தெரிவித்துள்ளார்.   அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி…

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அதிமுக-வை மீட்க யார் வந்தாலும் தன் ஆதரவு உண்டு என தெரிவித்துள்ளார்.

 

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக முக்கியமான நெருக்கடியில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தோல்வி யடைந்துள்ளது என்றார்.

 

எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. எனவே, அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமியை மாற்றுவது தான் அதிமுகவை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.

அதிமுகவை மீட்க யார் முன்வந்தாலும் என் ஆதரவை தருவேன். தலைமையை மாற்றாவிட்டால் அதிமுகவை காப்பாற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இனி ஆட்சியை பெற வேண்டுமென்றால் அதற்கான வழி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இல்லை, டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்க போராடுகிறார் என்ற அவர், ஓ.பி.எஸ் – சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது என்றும் அதிமுகவை மீட்க அவர்கள் போராடுகின்றனர் என்றும் கூறினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.