எத்தியோப்பியா : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 31 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு எத்தியோப்பியாவின் டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவை நோக்கி அதிகளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்து வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 31 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோ அல்லது ஆம்புலன்ஸ் சேவைகளோ இல்லாததால், அவசரகால மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பல பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காற்று வீசக்கூடிய மலைப்பிரதேசத்தில் சென்றபோது பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.