குஜராத்வாழ் தமிழர்களின் ஆதரவு யாருக்கு? நேரில் களம் இறங்கிய நியூஸ் 7 தமிழ்!

குஜராத்வாழ் தமிழர்களின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து அங்கிருந்து நொடிக்கு நொடி அப்டேட் கொடுக்க நேரில் களம் இறங்கியுள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.  அங்குள்ள தமிழர்களின் கருத்து என்ன என்பது குறித்து பார்க்கலாம். …

குஜராத்வாழ் தமிழர்களின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து அங்கிருந்து நொடிக்கு நொடி அப்டேட் கொடுக்க நேரில் களம் இறங்கியுள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.  அங்குள்ள தமிழர்களின் கருத்து என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில்,  இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இப்படி நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வாழ் தமிழர்களின் எண்ணவோட்டம் என்ன என்பது குறித்து கண்டறிய நியூஸ் 7 தமிழ் நேரில் களம் இறங்கியுள்ளது.  இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தின் மணி நகர் தொகுதியில் உள்ள மக்களிடம் நமது செய்தியாளர் வசந்தி நேரில் கலந்துரையாடினார்.

அப்போது மக்களின் மன நிலை என்ன? அவர்களின் ஆதரவு யாருக்கு,  அப்பகுதி மக்களின் கோரிக்கை என்ன என்பது குறித்தெல்லாம் மக்கள் மனம் திறந்து பேசியுள்ளனர்.

அதில்,  அகமதாபாத்தை சேர்ந்த மணி நகர் என்ற பகுதியில் உள்ள தமிழ் பேசும் மக்கள் மோடி மீண்டும் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே குஜராத்தின் 26 தொகுதிகளை தன்வசம் பாஜக வைத்துள்ளது.  இந்நிலையில்,  மோடி ஆட்சியில் குஜராத் வளர்ந்துள்ளதாக கூறும் மக்கள்,  ஏற்கனவே வென்ற தொகுதிகளில் பாஜக மீண்டும் வெல்லும் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில்,  குஜராத் வாழ் தமிழர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக காண கீழ்காணும் நியூஸ் 7 தமிழ் பிரைம் யூ டியூப் காணொலியை பார்க்கவும்….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.