அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்லுக்கு பின்னரே தெரியவரும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, இன்று 3-வது நாளாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். புலியூர்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மக்களின் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளவே நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பாஜக கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் பன்முக தன்மையை மாற்ற பாஜக முயல்வதாகவும் விமர்சித்தார்.
நடைபயணத்தில் காங்கிரசார் மட்டுமின்றி, பொதுமக்களும் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்தலுக்கு பின்னர் தெரியவரும் என தெரிவித்த அவர், இந்தியாவின் ஒற்றுமைக்காகவே இந்த நடைபயணம் என்றார். இந்த நடைபயணம் குறித்த விமர்சனத்தை தான் வரவேற்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்