தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எம்.எல்.ஏ. வேல்முருகன், நீட் தேர்வு காரணமாக அனிதா மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகள் உயிரிழந்திருப்பதாகவும், அதனை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் எப்படி வந்தது என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து, தமிழர்களை தவிர வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் குறித்து அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.