முக்கியச் செய்திகள் குற்றம்

பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை கொலை செய்த மகள்!

பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை மகள் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், இவர் தெருக்கூத்து நாடக கலைஞர், இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். முருகனுக்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியும் இரண்டாவது மகளும் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. மூத்த மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் வீட்டிற்கு சென்ற முருகன் தனது மூத்த மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் அம்மிக்கல்லை கொண்டு முருகன் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முருகனின் மனைவி மற்றும் மகள்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் முருகனின் உறவினர்கள் கூறுகையில், இந்த கொலையில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை சம்பவம் வெளிவரும் என்று தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 15,815 பேருக்கு கொரோனா

Web Editor

உயிரிழந்த தாயின் உடலோடு 2 நாட்களாக உணவின்றி தவித்த 18 மாத குழந்தை!

Jeba Arul Robinson

காமன்வெல்த் போட்டி- பஜ்ரங், ரவி தஹியா தேர்வு

G SaravanaKumar