மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரமாக மேற்கு திசை நோக்கி 15 கிலோமீட்டர்…

கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரமாக மேற்கு திசை நோக்கி 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து arnab புயலாக வலுப்பெற்றுள்ளது நாளைய தினம் 27ஆம் தேதி அதே பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர பிரதேசம் யானம் கடலோர பகுதிகளில் பப்பட்லா மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே தீவிர புயலாக 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடிய காற்றுடன் 28ஆம் தேதி முற்பகல நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளட்து.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.