மதுரை நெல்பேட்டை வெங்காய மண்டியில் 100 க்கும் மேற்பட்ட வெங்காய கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மூட்டைக்கு 50 கிலோ வீதம் நாள்தோறும் 2000 மூடைகள் வரத்து இருக்கும். இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக 900 மூடைகள் மட்டுமே வரத்து உள்ளதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யபட்டு வரும் நிலையில் மழைப்பொழிவால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் 5 கிலோ வாங்கும் இடத்தில் விலை ஏற்றம் காரணமாக 2 கிலோ வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசு ஒரு விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்பேட்டை வெங்காய மண்டி விலை நிலவரம்:
சின்ன வெங்காயம் கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சராசரியாக சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், மழை காரணமாக வெங்காய வறுத்து குறைவானதால் வெங்காயம் பன்மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.




