தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிம் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவ்வப்போதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடம் ஆலோசனை மேற்கொணடு வருகிறார். அதன்படி அக்டோபர் 18ஆம் தேதி சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கடந்த 22-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சென்னையில் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொணடார்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




