தங்கம் விலை சற்று உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.வேதியியல் கற்க

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,070-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும் ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி, வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.