திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், “97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!
ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை
SIR ரத்து
மீண்டும் வாக்குச்சீட்டு முறை
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை!
ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




