வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசிக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் பிரைவசி பாலிசியை மாற்றி வெளியிட்டது. இதில் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இந்த முடிவுக்கு எதிராக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வாட்ஸ் அப் தனிப்பட்ட செயலி என்பதால் அதற்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை பயனர்களே முடிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ் அப் மட்டுமல்லாமல் வேறு சில செயலிகளிலும் இதே பாலிசி உள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாட்ஸ் அப் செயலி மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்தார். வாட்ஸ் அப் பிசினஸ் கணக்குகள் மட்டுமே கண்காணிக்கப்படும் என்றும், தனிப்பட்ட குறுஞ்செய்திகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







