வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது எனக் கூறினார். மேலும், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், சாதி அடிப்படையில் தன்னை பூமியிக்குள் அடங்கி விடவேண்டும் என பலர் நினைத்தார்கள் எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ஊழல் பட்டியலை கொடுக்கும் திமுகவின் 2ஜியின் ஊழல் பற்றி என்ன சொல்வது என கேள்வி எழுப்பினார். மேலும், சட்டமன்ற தேர்தலில் பல வியூகங்களை வகுத்துள்ளதாகவும் சரத்குமார் கூறினார்.







