முக்கியச் செய்திகள் தமிழகம்

”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவிற்குள் உள்ள சின்னச்சின்ன பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு 2021 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அம்மா பேரவையின் மாநில செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய ஓ.பன்னீர்செல்வம், யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா காட்டிய வழியை பின் தொடர்ந்தால் அதிமுகவை வெல்ல யாரும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆண்டாள், ஔவையார் லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ளோம்: பிரதமர் மோடி

எல்.ரேணுகாதேவி

நடுக்கடலில் 134 அடி உயரத்தில் பேனா..உருவாகிறது தமிழ்நாட்டின் இன்னொரு அடையாளம்…

Web Editor

சர்வதேச புகைப்பட விருதை பெறும் தமிழர் – முதலமைச்சர் வாழ்த்து

Janani

Leave a Reply