வேலூரில் திராவிட நட்புக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த குருமார்கள் கலந்து கொண்டனர்.
வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் திராவிட நட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைருமான வேல்முருகன், நடிகர் சத்யராஜ் மற்றும் அனைத்து மத குருமார்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநாட்டில் பேசிய திருமாவளவன், ஆளுநர் ரவி தனது கடமையை மறந்து ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பாஜகவோடு திமுக கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்க்கட்சிகள் குறைகூறிப் பேசுவதற்கு பதிலளித்த அவர், பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது என்ற மூன்று நிபந்தனைகளோடுதான் பாஜகவுடன் கருணாநிதி கூட்டணி வைத்ததாக தெரிவித்தார்.
மாநாட்டில் இறுதியாக பேசிய அமைச்சர் துரைமுருகன், விடுதலை போராட்டத்துக்கு முதன்முதலாக வித்திட்ட வேலூரில் எது தொடங்கினாலும் வெற்றி பெறும் என்று கூறினார். காரணம் முதன் முதலாக இந்தியாவில், சுதந்திரக்கொடியை ஏற்றியது இந்த வேலூரில்தான். பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்ததும் வேலூரில்தான். அதனால் தி.மு.க பிறந்ததும் வேலூரில்தான். அண்ணாவைச் சிறைச்சாலையில் வைத்ததும் வேலூரில் தான். வெளியே வந்த அண்ணா, ‘திராவிட நாட்டை ஒத்திவைக்கிறேன்’ என்று சொன்னதும் வேலூரில்தான். ஆக, எல்லாவற்றிற்கும் ஆணிவேர் வேலூர்தான். அதனால் வேலூரில் நடைபெறும் இந்த மாநாட்டின் லட்சியமும் நிச்சயமாக வெற்றிபெறும். யார் பணிந்தாலும் பெரியார் மண்ணான தமிழ்நாடு மட்டும் பாஜகவுக்கு அடிபணியாது என்றும் துரைமுருகன் தெரிவித்தார் . மேலும், சிறுபான்மையினர், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக திமுக என்றும் திகழும் என்றும் அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா