கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை, என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.பின்பு நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், மாணவ பருவத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, படிப்படியாக பல்வேறு பதவிகளை பெற்று தற்போது முதலமைச்சர் வேட்பாளராக மக்களை சந்திக்க வந்துள்ளதாக கூறினார்.
மேலும், திமுக ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், கடந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக கூறியதுபோல, செல்போன் தந்தார்களா? கேபிள் டிவி கட்டணத்தை 70 ரூபாயாக குறைத்தார்களா? என பரைபுரையின் போது அவர் குற்றம் சாட்டினார்.







