தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் தமிழைப் பற்றி கவர்னருக்கு
என்ன தெரியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சிவகாசி ராஜபாளையம் பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..

”தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு
என்ன தெரியும். ஏதோ ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதினால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும். கவர்னரின் இந்த
கருத்துக்கு தேமுதிக தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
அதேபோல மக்கள் ஐடி எடுப்பது என்பது, மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஏற்கனவே ஆதார் ஐடி மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது.இந்த நிலையில் மக்கள் ஐடி என்பது தேவையில்லை.
முதலில் வெளிமாநிலத்தவர்கள் எத்தனை நபர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐடி எடுத்தால் என்ன ஆவது. எனவே இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் மக்களிடம் கருத்து கேட்டு தான் இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் கூட்டனி குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் “பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது உள்கட்சி தேர்தல் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது . அவை முடிந்தவுடன் செயற்குழு கூட்டப்பட இருக்கிறது. வருத்தப்படாதீங்க, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் அவர்கள் தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்” எனக் கூறினார்.







