எ.வ. வேலுவிற்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…!

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த 2021-26 திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் தற்போது சட்டமன்றத்தில் திமுக-வின் கொறடாவாக உள்ளார்.

இந்த நிலையில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகின்றனர்.

எதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்து முழுமையானத் தகவல் வெளியாகவில்லை. சோதனைக்குப் பிறகு இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.