முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஹிமாச்சல் அமைச்சரவை விரிவாக்கம்: மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய அமைச்சராக பதவி ஏற்பு

இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை களமிறங்கியது. இதில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு கடந்த மாதம் 11ம் தேதி அன்று பதிவியேற்றுக்கொண்டார்.இவரைத்தொடர்ந்து துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியையும் பதவியேற்றார். சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர், துணை முதல்வர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 12-ஐ தாண்டக்கூடாது என்பதால், அமைச்சரவையில் 10 காலியிடங்களுக்கான அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு, காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கடந்த சனிக்கிழமை அன்று முதலமைச்சர் சுகு தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து, இன்று இமாச்சலப் பிரதேசம், சிம்லா ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களுக்கான பதியேற்பு விழா நடைபெற்றது. புதிய மந்திரிகளுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் கேபினட் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

மாநில காங்கிரஸ் தலைவரான விக்ரமாதித்ய சிங்கின் தயார் பிரதிபா சிங், முதல்வர் போட்டியில் சுக்குவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

Web Editor

”தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

EZHILARASAN D

நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல்

EZHILARASAN D