சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன?

சட்டப்பேர்வையில் இன்று எரிசக்தித், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி 2026-27-ஆம் ஆடுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பட்ஜெட் மீதான் விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை பொதுப்பணித் துறை, நீர்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் விளக்கமளிக்க உள்ளனர்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் சரியாக காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.