ஓடிடி-ல் வெளியானது முதல்வரின் ‘ஜனநாயகன்’!

தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜயின் ஜனநாயகன் திறைப்படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகரும் தற்போதைய முதலைமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்பரப்டமான ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம், பொங்கலை முன்னிட்டு  ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது.

சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் அன்று வெளியாகவில்லை. இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்மன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் படம் வெளியானது. பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ஜனநாயகன் திரைப்படம், வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.  இதுவரை 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் அதிகாரப்பூர்வமாக zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.