தென்மாநில முதல்வர்கள் மாநாடு: தண்ணீர் பிரச்னைகளைத் தீர்க்க அமித் ஷா பரிந்துரை!

தென்மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அமித் ஷா பரிந்துரைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரள மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய பிரச்னிகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய போது நீட், தொகுதி மறுவரையறை, காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் நிலைபாட்டை வளியுறுத்தினார்.

இந்த நிலையில் இக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷ ,“மாநிலங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாப்பது தவறல்ல என்றாலும், அதன் விளைவாக மற்ற மாநிலங்கள் பல ஆண்டுகளாகத் தண்ணீர் கிடைக்காமல் தவிப்பது நியாயப்படுத்த முடியாத ஒரு நிலைப்பாடு. தண்ணீர் கடலில் கலக்கும்போது, ​​உண்மையான நலன் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. பிரம்மபுத்திரா முதல் காவேரி மற்றும் கோதாவரி வரையிலான முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்காது என்பதை உறுதிசெய்ய முடியும்.

தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தின் முக்கியத் தூண்களாகும், மேலும் தென்னிந்திய மாநிலங்களின் முன்னேற்றம் தண்ணீரைச் சார்ந்துள்ளது. விவசாயம், தொழில், ஆரோக்கியமான குடிமக்கள் அல்லது சுற்றுச்சூழல் என இந்த நான்கு துறைகளிலும் தண்ணீர்தான் இப்பகுதியின் ஆன்மாவாக உள்ளது. ஆறுகளை ஒன்றிணைப்பது பல நீர்வழிகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என்றும், அது எரிபொருளைச் சேமித்து, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், செலவு குறைந்த போக்குவரத்து அமைப்பையும் வழங்கும்.

தென்னிந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளுக்குத் தீர்வாக, ஜல் சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டங்களை நடத்தலாம். நிலுவையில் உள்ள இந்த நீர் தகராறுகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் மூலம் விரைவாகத் தீர்க்க வேண்டும்.” என்றார். இந்த பரிந்துரையை தென்னிந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாக கூறபடுகிறது.

மேலும், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்பது ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவசியமான ஒன்று. உயர் எழுத்தறிவு விகிதம், பயிற்சி பெற்ற மனிதவளம் மற்றும் ஆழ்கடலைப் பயன்படுத்துவதில் உள்ள தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையிலேயே தென்னிந்திய மாநிலங்களின் முழுமையான வளர்ச்சிப் பயணமும் அமைந்துள்ளது. இந்த மூன்று தூண்களே தென்னிந்தியாவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக ஆக்கியுள்ளன. தென்னிந்திய மக்களும் அரசாங்கங்களும் புத்தாக்கம் மற்றும் வருவாய் ஈட்டுதல் ஆகிய துறைகளில் பல சிறந்த மரபுகளையும் நிறுவியுள்ளனர்,” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.