என்ன ஒரு புத்திசாலித்தனம்….. வியக்க வைக்கும் உணவகத்தின் பெயர்!

உணவகம் ஒன்றிற்கு புத்திசாலித்தனமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்ற தனித்த ருசிக்கு ஏற்ப உணவுகளை உண்ண விரும்புவது வழக்கம். ஒருவேளை நாம் வீட்டில் செய்யாத, உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளாக இருந்தால்,…

உணவகம் ஒன்றிற்கு புத்திசாலித்தனமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒவ்வொருவரும் தங்களுக்கென்ற தனித்த ருசிக்கு ஏற்ப உணவுகளை உண்ண விரும்புவது வழக்கம். ஒருவேளை நாம் வீட்டில் செய்யாத, உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளாக இருந்தால், அந்த உணவு எங்கு மிகவும் ருசியாக கிடைக்கும் என்று தேடுவோம்.

அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்தில் பிறரிடம் உணவகம் குறித்து விசாரித்துச் சென்றிருப்பர். இன்று எந்த உணவுகள் எந்த உணவகங்களில் கிடைக்கும், எங்கு விலை மலிவாக கிடைக்கும் என்பது போன்ற விவரங்களை நாம் கூகுள் மூலமாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான உணவகங்களில் இருந்து நமக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.

https://twitter.com/0xgaut/status/1641619593830514688

அவ்வாறான தேடல்கள் இன்று அதிகரித்திருக்கும் நிலையில், உணவகம் ஒன்று மிகவும் புத்திசாலித்தனமாக தனது கடைக்கு பெயரிட்டுள்ளது. வழக்கமாக நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் எந்த உணவகம் இருக்கிறது என்று தான் தேடுவோம். இதனை புரிந்துகொண்ட உணவகம் “Thai Food Near Me” (தாய் ஃபுட் நியர் மீ) என்று பெயரிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 11 மாதங்களுக்குப் பின்னர் பாடலை வெளியிடும் BTS – உற்சாகத்தில் ARMY!

இந்த உணவகத்தின் படத்தை காட் எனும் ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். இதற்கு ‘உணவகத்திற்கான சரியான பெயர் இதுதான்’ என்று பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு ஏறத்தாழ 28 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.