ரீ-ரிலீசாகும் திரிஷா இல்லனா நயன்தாரா…!

ஜி.வி. பிரகாஷின் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’.

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் சிம்ரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.