தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பசலனம் மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பம்…

வெப்பசலனம் மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பம் மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக திருவள்ளூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவண்ணாமலை செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மேலும் 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.