தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதே வேகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பாட்டால் தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்ற புள்ளி விவரம் ஒன்று வெளியாகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் 18 வயதை கடந்தவர்கள் 5 கோடியே 80 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 97 லட்சத்து 62 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதே வேகத்தில் தடுப்பூசி போடும் பணி நீடித்தால் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







