அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று (ஏப்.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முன்னதாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும்… pic.twitter.com/JTS2U0Ue4v
— TVK Vijay (@TVKVijayHQ) April 14, 2025
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.








