GOLD RATE | மாலையில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை….!

தங்கம் விலை மாலையில், சவரனுக்கு ரூ.2,560 சரிந்து குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்த சூழலில் தங்கம் விலை நேற்று  கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ. 1,08,800-க்கும் விற்பனையானது

இன்று காலையும் உயர்ந்த தங்கம் விலை, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் சரிந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.