19-வது ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 28) தொடங்கி மே 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாததால் முதல் 20 ஐபிஎல் போட்டிகளுக்காக அட்டவணை மட்டுமே வெளியிட்டப்பட்டது. தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அண்மையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
இந்த நிலையில் மீதமுள்ள 50 போட்டிகளுக்கான முழு போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.









