மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிஜி தீவில் நள்ளிரவு 1.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 174 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே, மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏரளமானவ்ர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







