பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!

பெண் தொண்டர்களை மோசமாக விமர்சித்தது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக தலைவர் விஜய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அரசியல் விமர்சகர் மற்றும் அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் பேசிய அவர் தவெக கட்சியின் பெண் தொண்டர்களை மோசமாக விமர்சித்தாக சர்ச்சை எழுந்தது.

இதனை தொடர்ந்து இன்று மதியம் தவெக தலைவர் விஜய் பொன்ராஜின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து புகார் மனு அளித்த விஜய், தவெகவில் உள்ள பெண்கள் குறித்து தவறாக பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க  கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.