முக்கியச் செய்திகள் இந்தியா

“நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன்” – உமர் அப்துல்லா

“பன்முகத்தன்மை இந்தியாவின் ஐடியாவை நாம் நமது உள்ளங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைதான் நமது குழந்தைகளுக்கும் நமது பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு இதற்கு முன்னுதாரனமாக உள்ளது.” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28) நடைபெற்றது. இவ்விழாவில் நூலை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கனிமொழி எம்.பி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது சிறப்புரை ஆற்றிய உமர் அப்துல்லா உரை சுருக்கம்; “13 வயதில் இருந்தே அரசியல் களத்தில் இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தனது செயல்பாடுகளால் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

நான் இங்கு ஏன் வந்திருக்கிறேன் எனில், துன்பம் வரும் சமயங்களில் நம் நண்பர்கள் யார் என்று தெரியும். ஆக.5 (ஆக.5ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது) அன்று நாங்கள் எதிர்பார்காத சிக்களில் மாட்டிக்கொண்டோம். அப்போதுதான் உண்மை நண்பர்கள் யார் என்பதை உணர்ந்துக்கொண்டோம். யாரையெல்லாம் நாங்கள் நண்பன் என்று எண்ணிக்கொண்டிருந்தோமோ அவர்கள் வெறுமென அமைதியாக இருந்தார்கள்

நியாமற்ற முறையில் ஜம்மு காஷ்மீர் நடத்தப்பட்டபோது அதை எதிர்த்து யாரெல்லாம் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அவர்கள் இது குறித்து எதுவும் சொல்லவில்லை. மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஆக.5ம் தேதியன்று உற்ற நண்பர்கள், உயிர் தோழர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் இந்த அறிவிப்புக்கு உடந்தையாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கான ஆதரவு குரல்கள் வந்தன. மு.க.ஸ்டாலினும் அவரது தோழமை கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தன. மட்டுமல்லாது நாங்கள் வீட்டு காவலில் தடுக்கப்பட்டது குறித்தும் அரசியலமைப்பு சட்டம் துண்டாடப்பட்டதற்கும் மற்றும் ஜம்மு காஷ்மீர் நியாமற்ற முறையில் நடத்தப்பட்டதற்கும் கண்டனமும் தெரிவித்தனர். தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆதரவை இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் மறக்கவில்லை.

இது என்னுடைய தனிப்பட்ட பணிக்கான வருகை மட்டுமன்று. என்னுடைய தந்தை மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் சார்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.

எங்கள் மாநிலம் மிகவும் சிறியது. மக்கள் தொகையும் கட்சிகளும் சிறியதுதான். மட்டுமல்லாது நாங்கள் நெடுந்தொலைவில் உள்ளோம். ஆனால் உங்களுக்கான தேவையின்போது பனியானாலும், மழையானாலும் எந்த சூழலிலும் நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம் எப்போதும். உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்துக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன என்பதை சொல்ல பாதிக்கப்பட்டவனாக நான் இங்கு நின்று பேசவில்லை. மாறாக அடுத்து என்ன நடக்கும் என்பதை எச்சரிப்பதற்காகவும் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் மக்களின் கருத்து கேட்கப்படாமல் யூனியன் பிரதேசமாக அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? தமிழ்நாட்டின் ஆளுநர் அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொண்டு மாநிலத்தை 3 பகுதிகளாக பிரித்துவிட்டால் என்ன செய்ய முடியும்?

இவற்றை தடுக்க இங்கு கூடியுள்ளவர்களால் முடியும் என நான் நம்புகிறேன். இதுவே ஜம்மு காஷ்மீர் மக்களின் சார்பாக நான் கொண்டுவந்திருக்கும் கோரிக்கையாகும். எங்கள் மாநிலத்தில் தொடங்கியது அங்கே நின்றுவிடாது. இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். இது சரியான போராட்டம்தான். இந்த சமரசமற்ற நிலையை எதிர்த்து போராடுவது எளிதானது அல்ல. ஆனால் இந்த போராட்டம் நிச்சயம் தேவையான ஒன்று.

பன்முகத்தன்மை இந்தியாவின் ஐடியாவை நாம் நமது உள்ளங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைதான் நமது குழந்தைகளுக்கும் நமது பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு இந்த இந்தியாவுக்கு முன்னுதாரனமாக உள்ளது.

வேட்டி, பைஜாமா, ஜீன்ஸ் அல்லது புர்கா, முக்காடு, ஹிஜாப் என என்ன உடை அணிய வேண்டும் என்பது எனக்கும் எனது இறை நம்பிக்கைக்கும் இடையேயானது. இந்தியாவும் அதுதான். பன்முகத்தன்மைதான் இந்தியா. நாம் அதைதான் தற்போது பாதுகாக்க வேண்டும். ஒரு வேளை தற்போதைய அரசாங்கத்தின் சித்தாந்தங்கள் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் யார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்ய முடியாது. கேரளாவில் மாநில அமைச்சர்களின் கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும்போது திடீரென டெல்லியிருந்து அழைத்து உங்கள் மாநிலத்தின் தலைமை செயலாளர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படலாம்.

இதுதான் ஜனநாயக இந்தியாவின் ஐடியாவா? இதைதான் நாம் வலுப்படுத்த விரும்புகிறோமா? மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

நாடு தற்போது அபாயகரமான நிலையில் உள்ளது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க காஷ்மீர் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.” என்று உமர் அப்துல்லா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

முழு மொழிப்பெயர்ப்பு ஹேலி கார்த்திக்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரையிறுதிக்கு முன் ஐசியூ: பாக். வீரருக்கு சிகிச்சை அளித்த இந்திய டாக்டர் ஆச்சரியம்!

Halley Karthik

கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா: இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்பு!

Web Editor

தக்காளி விலை உயர்வு – நியூஸ் 7 தமிழின் கள ஆய்வு; நிபுணர்களின் பரிந்துரைகள்

G SaravanaKumar