பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“அண்மையில் நடந்து முடிந்துள்ள 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 20-ந் தேதி (இன்று) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரர் ராஜ்மோகனால், சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.