முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறுகையில், தனி தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லது இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என்று தெரிவித்தார்.

பாஜக அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கேட்க பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதிமுக என்பது என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இதுபோன்ற செயல் நடைபெறாது என்று பதிலளித்தார். மேலும்  பேசிய அவர், “இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கொஞ்சம் பொறுத்திருங்கள். திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும். பேனா சின்னம் அமைப்பதை ஒரு வகையில் நான் எதிர்க்கிறேன். பேனா சின்னம் அமைத்தால் மீனவர்களை பாதிக்கும். அவருக்கு ஆசைப்பட்டால் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில் வைக்கலாம். அதற்காக இவ்வளவு உயரத்தில் அமைக்க வேண்டுமா,நிதி நிலை இல்லை என்கிறீர்கள்? ஆனால் இதற்கு 80 கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர் இதற்கு மட்டும் நிதி எப்படி வந்தது” என்று சசிகலா கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விக்ரம் அவருக்கான நேரம் வரும் வரை காத்திருந்தார் – இயக்குநர் கே.பாக்யராஜ்

EZHILARASAN D

”இலவச மின்சார சலுகையை ரத்துசெய்யும் ஒன்றிய அரசு முயற்சிக்கு துணை போக வேண்டாம்”- தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

Web Editor

‘துக்ளக் தர்பார்’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

G SaravanaKumar