“பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!

பதவிக்காக நாங்கள் தவெகவிற்கு போகவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் என்னை தொடர்ந்து 5 வாது முறை வெற்றி பெற வைத்துள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று இன்று தான் கோவை வருகிறேன். எனக்காகவும், அதிமுக வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அதிமுக எங்கள் உயிர் மூச்சு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என எப்போதுமே கூறி வருகிறோம். நாங்கள் ஒரு சில கோரிக்கை வைத்தோம், அதை ஏற்றுள்ளார்.

தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வெற்றிக்கான வேலை செய்வோம். பதவிக்காக நாங்கள் தவெகவிற்கு போகவில்லை. மக்கள் ஆதரவு தான், அதை தான் சட்டமன்றத்தில் கொடுத்தோம். திமுக எதிர்ப்பு மட்டுமே குறிக்கோள். அண்ணன், தம்பியாக ஒற்றுமையாக உள்ளோம். தொண்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம். தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குற்றங்கள் குறைய வேண்டும். கோவைக்கு வளர்ச்சியை கொடுத்து உள்ளோம். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கொடுத்த மனுக்களை சரிபார்த்து கொடுத்ததே சி.வி.சண்முகன் தான். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எங்கள் கருத்து தான் சி.வி.சண்முகத்தின் கருத்து. அனைத்து முடிவுகளும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து தான் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.