கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீடுபு பணியில் ஈடுபட்டனர்.
கமாண்டன்ட் ஸ்ரீ அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில், மொத்தம் 60 வீரர்களைக் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் வங்காளத்தை சேர்ந்த ராகேஷ் குச்சாத் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்ரம் ராணா என்பவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் எட்டாவது நபரின் உடல் மீட்கபட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




