மத்திய ஜவுளித்துறை அமைச்சருடன் தமிழ்நாடு ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி சந்திப்பு!

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்த தமிழ்நாடு ஜவுளித் துறை அமைச்சர் விஜய் சங்கர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

டெல்லியில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய ஜவுளித் துறைத் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம், மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி உதவி மற்றும் தமிழ்நாட்டின் ஜவுளி, கைத்தறி மற்றும் கதர் துறைகளின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்து, மத்திய அரசின் உரிய ஒத்துழைப்பு மற்றும் நிதி ஆதரவை வழங்குமாறு வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:

  1. ஈரோடு மாவட்டத்தில் பிரத்யேக விசைத்தறிப் பூங்கா (Exclusive Powerloom Park) அமைப்பதற்கு நிதியுதவி வழங்குதல்
  2. காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் (SETFC)
  3. கைத்தறி வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள்
  4. ஆரணி கைத்தறிப் பட்டுப் பூங்கா – இரண்டாம் கட்டத்திற்கான நிதி ஒப்புதல்
  5. கைத்தறித் தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி (GST) விலக்கு அளித்தல்
  6. தொடக்க நிறுவனங்கள் / முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான சிறப்பு கூறு நிதியுதவி
  7. நூல் விநியோகத் திட்டத்தின் கீழ் ஜரிகைக்கு 15 விழுக்காடு மானியம் வழங்குதல்
  8. தமிழ்நாடு ஜரி லிமிடெட், காஞ்சிபுரத்தில் வெள்ளி இழை (Silver Thread) உற்பத்தி அலகு அமைத்தல்
  9. மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு விடுவிக்கப்பட வேண்டிய பல்வேறு திட்ட நிலுவைகள்.
  10. ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஜவுளி தொகுதிகளில் பூஜ்ஜிய திரவவெளியேற்ற (Zero Liquid Discharge – ZLD) வசதியுடன் கூடிய பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Common Effluent Treatment Plants – CETPs) அமைப்பதற்கு நிதியுதவி வழங்குதல் குறித்து
  11. நூற்பாலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது 31.10.2026 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள பருத்தி இறக்குமதிக்கான 11% இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்குதல்
  12. தொழில் நுட்ப ஜவுளி மேம்பாடு மற்றும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அரசு–தொழில் துறை பிரதிநிதிகள் குழு வெளிநாட்டு பயணங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி வழங்குதல்
  13. SAFE (Site Adjacent Factory Employee Accommodation) திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல்
  14. தேனி வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா (Theni Vaigai
    Hi-Tech Weaving Park) திட்டத்தை செயல்படுத்த கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் வருவாய் வசூல் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குதல்
  15. மத்திய அரசால் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை (SITP) மீண்டும் அறிமுகப்படுத்துதல்
  16. மதுரையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், 75:25 என்ற விகிதத்தில் நிதி பங்களிப்பு அடிப்படையில் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்முதல் மையம் (Marketing&Sourcing Hub) ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவி கோருதல்.
  17. திருநெல்வேலியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், 75:25 என்ற விகிதத்தில் நிதிப் பங்களிப்புடன் கூடிய ‘சந்தைப்படுத்துதல் மற்றும் கொள்முதல் மையம்’ (Marketing & Sourcing Hub) ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவி கோரப்படுகிறது.
  18. தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ள பஞ்சலோக சிற்பக் கைத்திறத் தொழிலுக்கான பொது வசதி மையத்தை (Common Facility Centre) ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான நிதியுதவி கோருதல்
  19. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரச்சிற்பக் கைவினைக்கான புதிய பொது வசதி மையம் (Common Facility Centre) அமைப்பதற்கு ரூ.3.00 கோடி நிதியுதவி கோருதல்
  20. சர்வதேச சந்தைப்படுத்துதல் நிகழ்வுகள் மற்றும் காந்தி சில்ப் பஜார் கண்காட்சிகள் (3 சர்வதேச / 2 தேசிய அளவில் / 3 மாநில அளவில் / 2 மாவட்ட அளவில்) ஆகியவற்றை நடத்துவதற்கான மானியக் கோரிக்கை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.