முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி டி20 போட்டிகளில் களமிறங்கியது. முதல் டி20 போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மற்ற 4 டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் டி20 தொடரை 4-0 என இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமை வகிக்கிறார். ஷ்ரேயஸ் தலைமையிலான அணி டி20 தொடரை தவரவிட்ட நிலையில் சுப்மன் கில் தலைமையிலான அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றுமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியில் இருவரும் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை மதியம், 3:30 மணிக்கு தொடங்கும் ஒருநாள் போட்டிக்கான அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதில், ஜேக்கப் பெதெல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.