டெல்லியில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருதை வழங்கி கவுரவித்தார். கவிஞர் வைரமுத்து ஞானபீடம் விருது பெறும் 60 வது இலக்கியவாதி ஆவார்.
விழாமேடையில் மேடையில் பேசிய கவிஞர் வைரமுத்து, “ஞானபீட விருது பெறும் பொழுது கூடுதல் சந்தோஷம் பெறுகிறேன். சாகித்ய அகாடமி விருது, தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ என பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த ஞானபீடம் விருது பெறும் பொழுது அதிக மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு கிடைத்த இந்த ஞானபீட விருதை தமிழ் சமூகத்துக்கு பகிர்ந்து கொடுக்கிறேன். காகிதம் மற்றும் வாசகர்கள் இவர்கள்தான் ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம். ஆனால் இது இரண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இலக்கியத்திற்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்” என்று அவர் கூரினார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித கவிஒஞர் வைரமுத்து, “நான் பெற்ற ஞான பீட விருதை தமிழ் மக்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன். தமிழில் உயரிய படைப்புகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழ் எழுத்தாளர்களுக்கு கூடுதல் விருதுகள் கிடைக்கும்
சாகித்ய அகடமி என்பது பல்வேறு மாநில மொழிகளில் உள்ள சிறந்த படைப்பாளிகளுக்கு , இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும். ஆனால் ஞானபீடம் விருது என்பது அனைத்து மொழிகளில் இருந்து சிறந்த இலக்கியவாதியாக ஒருவருக்கு வழங்கப்படுவது ஆகும்” என்று கூறினார்.
ஞானபீடம் விருது வழங்கிய போது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது குறித்து பேசிய வைரமுத்து, “ஒருவருக்கு விருது வழங்கும் போது அந்த விருதுக்கு எதிர்ப்பு எழுவது என்பது ஆச்சரியமானது அல்ல ஒரு விருதுக்கு எதிர்ப்பு எழுந்தால் தான் அந்த விருதுக்கு மதிப்பு. இலகியத்துக்கு என தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மத்தியஅரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றும் வைரமுத்து கூறினார்




