சென்னை தியாகராய நகரில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே, தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே  அதிகாலை டேங்கர் லாரியை ராமு…

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே, தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே  அதிகாலை டேங்கர் லாரியை ராமு என்பவர் தூக்க  கலக்கத்தில் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே இருந்த சென்டர் மீடியனில் மோதி லாாி  கவிழ்ந்தது. இதனால் மகாலிங்கபுரம் செல்லக் கூடிய மேம்பாலத்தில் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டது. பின்னா்  லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.