மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் என்ற…

மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் என்ற தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, தொடர்ந்து அமைதியாக நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர்.

இதேபோல, மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதையும் படியுங்கள் : 9 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய பூனை! – அமெரிக்காவில் நெகிழ்ச்சி 

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேகாலயாவில் 63.91 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 72.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இரண்டு மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.