தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை தாமதம் இன்றி ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வருவதாக சபாநாயகர் அப்பாவு நாட்டுப்புற கலைஞர்கள் பெருமன்றத்தின் பத்தாவது மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்ற போது தெரிவித்தார்.
நாட்டுப்புற கலைஞர்கள் பெருமன்றத்தின் பத்தாவது மாநில மாநடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைச் செய்தி: 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது..
“தமிழகத்தில் 6 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் இருந்தாலும், அதில் 50 ஆயிரம் பேர் மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்து இருக்கின்றனர். நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலத்திற்கு நெல்லை மணிமண்டபம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை தாமதம் இன்றி ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வர உள்ளது” என தெரிவித்தார்.
இதனியடுத்து பேசிய இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்ததாவது…
“ ஒவ்வொரு கலைஞர்களுக்கும் அடையாள அட்டை வழங்க கலைகளில் தேர்ந்த கலைஞர்களை வைத்து குழு உருவாக்கப்படும். நாட்டுப்புற கலைஞர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சரிசெய்யப்படும்” என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
- கே.ரூபி







