“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்

தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது…

தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

பரப்புரையின்போது பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பொள்ளாச்சி முதல் கோவை வரை நான்கு வழிச்சாலை, அரசு மருத்துவமனை விரிவாக்கம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தனக்கு வாக்களித்த மக்களையும் தேர்தல் பணியாற்றிய தொண்டர்களையும் எப்பொழுதும் மறக்கமாட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், தன் தாய் மீது ஆணையாக அவர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.