இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இரண்டு தொகுதியிலும் தவெக முன்னிலை!

இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதியில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் அவ்விரு தொகுதிகளுக்கு கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாதக என 5 முனைபோட்டி நிலவும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதன்படி மதுராந்தகத்தில் 86.26%% வாக்குகளும், தாராபுரத்தில் 80.25% வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில் இவ்விரு தொகுதிகளுக்கான வாக்க எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

முதல் சுற்று தபால் வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி இரண்டுதொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் தவெக 43 வாக்குகளும், திமுக 35 வாக்குகளும், அதிமுக 17 வாக்குகளும் பெற்றுள்ளன.

அதேபோல் தாராபுரத்தில் தவெக 22 வாக்குகளும், திமுக 16 வாக்குகளும், அதிமுக 8 வாக்குகளும் பெற்றுள்ளன.

மேலும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ஆளும் என்.ஏர்.காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.