மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
முதல் சுற்று முடிவில் மதுராந்தகத்தில் தவெக 3972 வாக்குகளுடன் முன்னிலைப் பெற்று வருகிறது, அதிமுக 2298 வாக்குகளுடன் 2-ஆம் இடத்திலும், திமுக 2898 வாக்குகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன. மேலும் நாதக39 வாக்குகளும், சிபிஐஎம் – 19 வாக்குகளும் பெற்றுள்ளன.
அதேபோல் தாராபுரம் முதல் சுற்று முடிவில், தவெக 2634 வாக்குகளுடன் முதலிடத்திலும், திமுக 2019 வாக்குகளுடன் 2-ஆம் இடத்திலும், அதிமுக 2639 வாக்குகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளது. மேலும் நாதக 168 வாக்குகளும், சிபிஐ 70 வாக்குகளும் பெற்றுள்ளன.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி முதல் சுற்று முடிவில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வெற்றுள்ளது. அதன்படி , என்.ஆர் காங்கிரஸ் – 3209 காங்கிரஸ் – 1222, திமுக – 786 வாக்குகள் பெற்றுள்ளன.




