விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர்.
விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஹரிகரன் உள்ளிட்ட 4 பேரை, 6 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நேற்று அனுமதி வழங்கினார். இதனையடுத்து சிபிசிஐடி அலுவலகம் அழைத்து 4 பேரிடமும், இரண்டாவது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஒருவரான மாடசாமியை, பாதிக்கப்பட்ட இளம்பெண் வசிக்கும் பகுதிக்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த விசாரணையின் போது ஹரிகரன் நண்பர்கள் ஒரு சிலரை விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.







