முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல்…

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எழுந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமாருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, 2 வாரங்களுக்கு இருவரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், அதன் பின்னர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மட்டும் திங்கட்கிழமை தோறும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.