மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் கூடிய விரைவில் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 5,758 பயனாளிகளுக்கு 29 கோடியே 8 லட்சம் ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூடிய விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும் என்றும் அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.







