இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே சென்னை  – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த  டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு…

விழுப்புரம் அருகே சென்னை  – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த  டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது இருவேல்பட்டில் டேங்கர் லாரி முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் திருச்சியை சார்ந்த ராகுல் மற்றும் மயிலாடுதுறையை சார்ந்த ஷபிக் என்பது தெரியவந்தது.

விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் சில மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.