பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒடிசா மாநிலத்தில் தொடர் வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன்
அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று தொடர் வண்டிகள் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பொள்ளாச்சி அருகேயுள்ள
பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மண்டியிட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடர்வண்டி ஓவியம் முன் நின்று மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் இது போன்ற கோர விபத்து இதுவே கடைசியாக இருக்க வேண்டும் எனவும் கண்ணீருடன் இறைவனை பிரார்த்தனை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
-ரெ.வீரம்மாதேவி